பல்வேறு தொழிற்துறைகளில் முன்னோடியும், புத்தாக்க செயற்பாட்டாளருமான, இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரங்களில் ஒன்றாக அமைந்துள்ள, Baurs என அறியப்படும் A. Baur & Co. (Pvt.) Ltd, தனது பணிப்பாளர் சபையின் மாற்று பணிப்பாளராக கெஹான் செனெவிரட்ன அவர்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது செனெவிரட்னவின் பரந்த தொழில் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.
தமது ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் அதிசிறந்த தலைமைத்துவ திறன்களை பிரதிபலிக்கும் இந்த உயர் நிலைக்கு அப்பால், செனெவிரட்ன தொடர்ந்தும், A. Baur & Co. (Pvt.) Ltd இன் முன்னணி துணை நிறுவனமான Baur Life Sciences (Pvt.) Ltd இன் பணிப்பாளராக செயலாற்றுவார். நிறுவனத்தை நிலைபேறான வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு அவரின் இந்த இரட்டை பொறுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்த நிலையை வகிக்கும்.
கெஹானின் நிபுணத்துவ தொழில் வாழ்வில், அவர் GlaxoSmithKline, Merck Sharpe & Dohme மற்றும் Baur Life Sciences ஆகியவற்றில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மருந்தாக்கல் துறையில் அவர் கொண்டுள்ள ஆழமான அனுபவம் மற்றும் உறுதியான தலைமைத்துவத்தையும் இது வெளிப்படுத்துகிறது. அவரது தொலைநோக்கு அணுகுமுறை பல புதுமையான தயாரிப்புகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது, மருந்துத் துறையில் மரியாதைக்குரிய சிந்தனைத் தலைவராக அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
கெஹான செனெவிரட்ன தமது நிலையில் ஆழமான அனுபவத்தை கொண்டுள்ளார். குறிப்பாக பல்வேறு நிறுவனங்களில் பல தலைமைத்துவ நிலைகளையும் வகிக்கின்றார். அதில் இலங்கை மருந்தாக்கல் தொழிற்துறை சம்மேளனத்தின் (SLCPI) அங்கத்தவர் மற்றும் இலங்கை மருத்துவ சாதனங்கள் தொழிற்துறை சம்மேளனத்தில் (SLCMDI) பணிப்பாளர், பொது உறவுகள் தவிசாளர், செயலாளர் மற்றும் உப தலைவர் போன்ற நிலைகள் அடங்கியிருந்தன. மேலும், இலங்கை மருந்துப் பொருட்கள் ஊக்குவிப்பாளர் சம்மேளனத்தின் (PPA) கௌரவ செயலாளர் மற்றும் தலைவர் ஆகிய நிலைகளையும் கெஹான் வகித்துள்ளார்.
இலங்கை பணிப்பாளர் நிறுவகத்தின் (SLID) அங்கத்தவராகவும் கெஹான் திகழ்கின்றார். அவர், அவுஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக மாஸ்டர்ஸ் (சர்வதேச வியாபாரம்) பட்டத்தையும், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் (SLIM) பட்டப்பின்படிப்பு சந்தைப்படுத்தல் டிப்ளோமாவையும் கொண்டுள்ளார். இவர் Institute of Certified Management Accountants Australia (CMA Australia)இன் இறுதிக் கட்டத்தை எய்தியுள்ளதுடன், சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவ சந்தைப்படுத்துனர் (ஆசியா) மற்றும் இலங்கை பட்டய நிபுணத்துவ முகாமையாளர் நிறுவகத்தின் (CPM Sri Lanka) அங்கத்தவராகவும் திகழ்கின்றார்.
மேலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (NUS) பொது முகாமைத்துவ டிப்ளோமா கற்கையையும் கெஹான் பூர்த்தி செய்துள்ளார். BMI Lab இடமிருந்து வியாபார மாதிரி புத்தாக்க சான்றிதழ் மற்றும் மூலோபாய தீர்மானமெடுத்தல் சான்றிதழ் மற்றும் GSK Academy இலிருந்து Building Great Brands சான்றிதழையும் பெற்றுள்ளார். இவரின் கல்விசார் பின்புலத்தில், IDM இல் Diploma in Computer Studies மற்றும் ICBT Campus இல் Diploma in Business Management ஆகியனவும் அடங்கியுள்ளன. கல்கிசை, பரி.தோமாவின் கல்லூரியின் பழைய மாணவருமாவார். கெஹானின் நிபுணத்துவ பயணம் என்பது, சிறப்புக்கான அவரின் அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான பயிலல் மற்றும் நிறுவனங்களின் மீதான நேர்த்தியான தாக்கம் போன்றவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்ததுடன், பல்வேறு துறைகளில் சிறந்த பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி, பல சூழல்களை பின்பற்றி இயங்கும் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது தொழில்முறை சாதனைகளுக்கு மேலதிகமாக, கெஹான் தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாட்டிற்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளார், தொழில்துறை மாநாடுகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு, வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் சிறந்த நடைமுறைகளில் முன்னணியில் இருப்பதை உறுதிசெய்கிறார். தொடர்ச்சியான அறிவு மேம்பாட்டிற்கான இந்த அர்ப்பணிப்பு, சிறந்து விளங்குதல் மற்றும் தொழில்முறை முன்னேற்றத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. செனவிரத்னவின் நன்கு சம்பாதிக்கப்பட்ட நியமனத்திற்கு A. Baur & Co. (Pvt.) Ltd தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது, மேலும் வரும் ஆண்டுகளில் அவரது தலைமைத்துவம் மற்றும் மூலோபாய பார்வையின் தொடர்ச்சியான நேர்மறையான பங்களிப்புகளை எதிர்நோக்குகிறது.