Baurs தனது 1000 ஆவது பணிப்பாளர் சபை சந்திப்பை முன்னெடுத்து இலங்கையின் கூட்டாண்மை துறையில் வரலாற்று மைல்கல் சாதனையை பதிவு

பன்முகப்படுத்தப்பட்ட வியாபார செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ள முன்னணி கூட்டாண்மை நிறுவனமான, Baurs என பரவலாக அறியப்படும் A. Baur & Co. (Pvt.) Ltd, 2025 ஏப்ரல் 10ஆம் திகதி தனது 1000 ஆவது பணிப்பாளர் சபை சந்திப்பை முன்னெடுத்திருந்தது. கடந்த 128 வருட காலமாக புத்தாக்கத்தை முன்னெடுத்தல், நிலைபேறாண்மையை கட்டியெழுப்பல் மற்றும் முன்னேற்றத்தை துரிதப்படுத்தல் போன்றவற்றுக்கான தனது ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.

கொழும்பு 1, மேல் சத்தாம் வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Baur கட்டடத்தில் நடைபெற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என்பது, Baurs இன் கீர்த்திநாமத்தை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி, சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னேறல் மற்றும் இலங்கை மக்கள் மற்றும் பொருளாதாரத்துக்கு தனது உறுதியான பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

1897 முதல், இலங்கையின் மாற்றமடைந்து வரும் தேவைகளை பின்பற்றியுள்ளதுடன், தனது தொழிற்துறைசார் அம்சங்கள் பலதை மேம்படுத்தி, ஏனைய நிறுவனங்களையும் பின்பற்றச்
செய்யக்கூடிய வகையில் உலகத் தரம் வாய்ந்த நியமங்கள் மற்றும் சிறந்த செயற்பாடுகளை நிறுவியுமுள்ளது. அதன் பணிப்பாளர் சபை சந்திப்புகள் மூலோபாய தீர்மானங்களை மேற்கொள்வதில்
முக்கிய பங்காற்றியுள்ளதுடன், விவசாயத்துறையில் முன்னேற்றங்களை ஏற்படுத்தல், டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்தல் அல்லது விருந்தோம்பல் கல்வி மற்றும் பயிற்சியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தல் போன்றவற்றில் முன்னோடியாக திகழ்வதற்கும் வழிகோலியுள்ளன.

தூரநோக்குடைய மற்றும் பின்பற்றக்கூடிய சூழலை ஏற்படுத்துவதில் இந்த அமர்வுகள் மிகவும் முக்கியமானவையாக அமைந்துள்ளதுடன், Baurs சேவையாற்றும் சமூகங்கள் மற்றும்
தொழிற்துறைகளில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளன.

எமக்கு விருதுக்கு கிடைத்த 20 ஆயிரம் ரூபாவுடன் ஒவ்வொருவரும் தலா 2 ஆயிரம் ரூபா வீதம் சேர்த்து ஒரு ஒன்றுகூடலுக்கு தயார் செய்யப்படுகின்றது. அனைவரின் ஒத்துழைத்து ஒன்று கூடலில் கலந்துகொள்ளவும் டிஜிட்டல் மீடியா அணியும் இணைவார்கள் அவர்களும் இவ்வாறு பணத்தை சேகரித்து ஒன்று கூடலில் இணைவார்கள். எதிர்வரும் கிழமை ஏற்பாடு செய்யப்படும்.

இலங்கையில் நிலைபேறான சேதன விவசாயத்துறையில் முன்னோடியாக Baurs திகழ்கிறது. விஞ்ஞான ரீதியான நிபுணத்துவம் மற்றும் நடைமுறை பிரயோகங்கள் ஆகியவற்றை பிணைந்து,
நிலைபேறான விவசாயச் செய்கையை ஊக்குவிப்பதில் பங்களிப்புச் செய்கிறது. 2021 ஆம் ஆண்டில் இலங்கை சேதன விவசாய முறைமைக்கு மாற்றமடைந்த போது, உரிய ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கருத்திட்டமொன்றை Baurs கொண்டிருந்தது. சுவிட்சர்லாந்தின் FiBL மற்றும் HAFL ஆகியவற்றின் நிபுணர்களுடன் இணைந்து, நிலைபேறான சேதன விவசாய முறைகளை முன்வைத்திருந்தது.

இன்று, இந்த விடயதானம் தொடர்பில் பலதரப்பட்ட பங்காளர்களின் பங்கேற்புடன், சிறப்பான நிலையமொன்றை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. அண்மையில், தனது முன்னோடியான “சுப்பர்
யூரியா” உரப் பாவனை பிரயோகத்தில் புரட்சியை Baurs ஏற்படுத்தியிருந்தது. சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்து, விளைச்சலை மேம்படுத்தும் நைதரசன் இரட்டை பதமாக்கியாக இது
அமைந்துள்ளது. பொறுப்பு வாய்ந்த விவசாய புத்தாக்கத்துக்கான அதன் அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் நைட்ரஜன்
கழிவுகளை பாதியாகக் குறைக்க அவசர, ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று கூறும் நிலையான நைட்ரஜன் மேலாண்மை குறித்த ஐ.நா. கொழும்பு பிரகடனத்தில் கோடிட்டுக்
காட்டப்பட்டுள்ள உலகளாவிய இலக்குகளுடன் ஒன்றித்ததாக அமைந்துள்ளது.

விவசாயத்திற்கு அப்பால், மருந்துத் துறையில் Baurs தனது இருப்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. உலகளாவிய சுகாதாரத் தலைவர்களுடனான அதன் மூலோபாய கூட்டாண்மைகள், இலங்கையர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த மருந்துகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்களை அணுகுவதை உறுதி செய்வதில் அதன் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. Baurs, GSK, Fresenius, Nestle Health Science, Roche, Sanofi, Isispharma, OMRON, Viatris (முன்னர் Mylan), Sandoz, Ajanta Pharma, Novartis, Alcon, Mega, Merck, Dexa, Eisai, MSD, Encube, CheplaPharm, Johnson & Johnson, Apex, Vitrolife, Unichem, Rohto, Medtronics, Wellch Allyn, Beckton Dickinson, போன்ற புகழ்பெற்ற சர்வதேச வர்த்தக நாமங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. விரிவான விநியோக வலையமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் சுகாதாரப் பராமரிப்பு அணுகல் மற்றும் மலிவு
விலையை பௌர்ஸ் மாற்றுகிறது.

அதன் நுகர்வோர் பிரிவின் கீழ், துருக்கி வர்த்தக நாமமான, Marico,Emami, Energizer, போன்றவற்றுடன் கூட்டாண்மை மூலம் உணவு மற்றும் பானங்கள், தனிப்பட்ட பராமரிப்பு, வீட்டு
பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த தயாரிப்புகளை Baurs வழங்குகிறது. அதிநவீன சேமிப்பு வசதிகள் மற்றும் 15,000 க்கும் மேற்பட்ட நேரடி விற்பனை
நிலையங்களை உள்ளடக்கிய நாடு முழுவதும் விநியோக வலையமைப்புடன், Baurs அதன் தயாரிப்புகள் நாடு முழுவதும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்கிறது. இந்தப் பிரிவு
அனைத்து நவீன வர்த்தக வழிகள் வழியாகவும் செயல்படுகிறது, கரிம வளர்ச்சி மற்றும் புதிய தயாரிப்பு வரிசைகள் வழியாக விரிவாக்கத்திற்கான அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

இலங்கையின் உற்பத்தித் துறைக்கு Baurs இன் தொழில்துறை மூலப்பொருட்கள் பிரிவு நம்பகமான பங்காளியாகும். இது உலகளாவிய புகழ்பெற்ற நாமங்களான Klüber, Vanessence, Everlight,
SEFAR, Argus ஷாங்ஹாய், கலர்ஸ் இந்தியா, Vibrantz Nubiola, SAM-A, Soltex India, Pon Pure Chemicals, Jaysynth, Meghmani, ITW, DATACOLOR மற்றும் Texpro போன்றவற்றிலிருந்து உயர் செயல்திறன் உள்ளீடுகளை வழங்குகிறது. உணவுப் பொருட்களுக்கு, இது Pulviver மற்றும் Confluence Valley ஆகியவற்றைக் குறிக்கிறது. ஆடைகள், அச்சிடும் மைகள், மட்பாண்டங்கள், வண்ணப்பூச்சுகள், மருந்துகள், பிளாஸ்ரிக் பொருட்கள், வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு, இறப்பர், சீமெந்து, கண்ணாடி, உருக்கு இரும்பு மற்றும் ஆடை ஈரமான பதப்படுத்துதல் உள்ளிட்ட பரந்த அளவிலான தொழில்களுக்கு சேவைகளை வழங்குகிறது. Baurs செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யும் தரமான பொருட்களை அணுகுவதை உறுதி செய்கிறது. புதுமை மற்றும் சிறப்பில் கவனம் செலுத்தி, Baurs இலங்கையின் தொழில்துறை நிலப்பரப்பின் வளர்ச்சியைத் தொடர்ந்து இயக்கி வருகிறது.

Baurs இன் தாக்கம் வியாபார செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும் அமைந்துள்ளது. கல்வி மற்றும் பணியாளர் விருத்தியில் அதிகளவு கவனம் செலுத்துகிறது. அதன் Swiss Hotel Management Academy (SHMA) மற்றும் Skills for Sustainable Growth (SSG) ஆகியவற்றினூடாக, இலங்கையில் அடுத்த தலைமுறை விருந்தோம்பல் துறை நிபுணர்களை Baurs தயார்ப்படுத்திய வண்ணமுள்ளது.

திட்டமிடப்பட்ட காலப்பகுதிக்கு முன்னதாகவே, 10 பயிலல் நிலையங்கள் நிறுவப்பட்டு 2025 ஆம் ஆண்டளவில் 2240 இளைஞர்களுக்கு திறன் விருத்தியை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு
நிறுவனம் செயலாற்றுவதுடன், நாட்டின் திறமை மற்றும் மனித மூலதனம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் பெருமளவு பங்களிப்பை வழங்குகிறது.

Baurs இன் டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகள் நிறுவனத்தினுள் பரந்தளவில் மேற்கொள்ளப்படுவனவாக அமைந்துள்ளன. sales force automation, data analytics, cybersecurity மற்றும் AI-driven business intelligence ஆகியன அடங்கலாக உரிய காலப்பகுதிக்கு முன்னதாகவே முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் நிலைபேறாண்மை பற்றிய நிகழ்ச்சி நிரல் அதன் முன்னேற்றத்தின் முக்கிய அரணாக அமைந்துள்ளதுடன், பரந்த புதுப்பிக்கத்தக்க வலு மூலோபாயத்தின் அங்கமாக அமைந்துள்ளது. அதன் அண்மைய சூரிய மின் பிறப்பாக்கல் திட்டங்கள் அடங்கலாக, சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தணிப்பது மற்றும் பசுமையான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் போன்றவற்றில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

நிறுவனத்தின் சுவிஸ் பாரம்பரியத்தை பின்பற்றிய செயற்பாடுகள் மற்றும் Foundation Alfred et Eugénie Baur இன் அடித்தளங்களுக்கமைய, இலங்கையில் தனது கடப்பாட்டை உறுதியாக மேற்கொண்ட வண்ணமுள்ளது. UN Global Compact உடனான தமது இணைவு, சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பரந்த ஊழியர் நலன்பேணல் திட்டங்கள் போன்றவற்றினூடாக Baurs தொடர்ந்தும், இலங்கையின் சிறந்த நிறுவனமாக திகழாமல், இலங்கைக்கான சிறந்த நிறுவனமாகவும் அமைந்துள்ளது. ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலான தனது கீர்த்தி நாமத்தை தொடர்வதுடன், எதிர்வரும் பல ஆண்டுகளுக்கான தூர நோக்கத்தைக் கொண்டு, இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் Baurs தனது அர்ப்பணிப்பை மீள உறுதி
செய்துள்ளது.

doctor